முகப்பு

அதிகார விளக்கம்

5.இல்வாழ்க்கை

துணைவன் துணைவியார் கூடி நடத்தும் குடும்ப வாழ்வு

ஒளியுரை

விரைவில்
குறள் 41 குறள் 42 குறள் 43 குறள் 44 குறள் 45 குறள் 46 குறள் 47 குறள் 48 குறள் 49 குறள் 50
முகப்பு

குறள் 41

குறள் ௪௧

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை

சீர் பிரிக்கப்பட்ட குறள்

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்ஆற்றின் நின்ற துணை

ஒளியுரை

விரைவில்

பதவுரை

இல்வாழ்வான்-இல்லறத்தில் மேற்கொண்டு வாழ்வான்
என்பான்-என்று சொல்லப்படுபவன்
இயல்புடைய-இயல்பாகவே தன்னைச் சார்ந்திருக்கும்
மூவர்க்கும்-பெற்றோர் மனைவி மக்கள் ஆகிய மூன்று வகையினர்க்கும்
நல்-நல்ல
ஆற்றின் -ஒழுக்க வழிகளில்
நின்ற துணைநிலையாக இருக்கும் துணையாவான்

ஆசிரியருரை

புலவர் இரா. இளங்குமரனார்

இல்லற வாழ்வு வாழ்பவன் என்பவன் இயற்கைத் தொடர்பால் அமைந்த தாய் தந்தை மனைவிஆகிய மூவர்க்கும் நல்வழியில் நிலைபெற்ற துணை ஆவான்

குறளிசை

5.இல்வாழ்க்கை குறள் 42
முகப்பு

குறள் 42

குறள் ௩௨

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை .

சீர் பிரிக்கப்பட்ட குறள்

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.

ஒளியுரை

விரைவில்

பதவுரை

துறந்தார்க்கும்-துறவரத்தினை மேற்கொண்ட முனிவர்களுக்கும்
துவ்வாதவர்க்கும்-வறியவர்களுக்கும்
இறந்தார்க்கும்-யாருமின்றித் தம்மிடம் வந்து இறந்தவர்களுக்கும்
இல்வாழ்வான்-இல்லறத்தில் வாழ்பவன்
என்பான்-என்பவன்
துணை-துணையாகும்

ஆசிரியருரை

புலவர் இரா. இளங்குமரனார்

இல்லற வாழ்வு வாழ்பவன் தூய துறவியர்க்கும் உணவுக்கும் வழியில்லாமல் இருப்பவர்க்கும் பாதுகாப்பு இல்லாதவர்க்கும் துணையாவான்

குறளிசை

குறள் 41 5.இல்வாழ்க்கை குறள் 43
முகப்பு

குறள் 43

குறள் ௩௩

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான்என்றங்
கைம்புலத்தா றோம்பல் தலை.

சீர் பிரிக்கப்பட்ட குறள்

தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு
ஐம்புலத்துஆறு ஒம்பல் தலை

ஒளியுரை

விரைவில்

பதவுரை

தென்புலத்தார்-முன்னோர்கள்
தெய்வம் -தெய்வம்
விருந்து-விருந்தினர்
ஒக்கல்-சுற்றத்தார்
தான்-தான்
என்று-என்பதாகும்
ஐம்புலத்து-ஐந்து இடத்திலும் செய்ய வேண்டிய
ஆறு-வழியினை
ஓம்பல் தலை-போற்றிக் காத்துச் செய்தல் தலையாய அறமாகும்

ஆசிரியருரை

புலவர் இரா. இளங்குமரனார்

தெளிந்த அறிவினர், வாழ்வாங்கு வாழ்பவர், விருந்தினர்,சுற்றத்தினர், இவர்களைப் பேணும் தான் என்னும் ஐந்திடத் தாரையும் பேணல் இல்வாழ்வான் சிறந்த கடமையாம்

குறளிசை

குறள் 42 5.இல்வாழ்க்கை குறள் 44
முகப்பு

குறள் 44

குறள் ௩௪

பழிஅஞ்சிப் பாத்தூண் உடைத்துஅயின் வாழ்க்கை
வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல்

சீர் பிரிக்கப்பட்ட குறள்

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.

ஒளியுரை

விரைவில்

பதவுரை

பழிஅஞ்சிப்-பலிக்கு அச்சப்பட்டு
பாத்து-பலருக்கும் பகுத்துக் கொடுத்து
உண்-உண்ணும் முறையினை
வாழ்க்கை-இல்வாழ்க்கையானது
உடைத்தாயின்-பெற்றிருக்குமானால்
வழிஎஞ்சல்-அவனுடைய பரம்பரை மறைதல்
எஞ்ஞான்றும் இல்-எக்காலத்திலும் இல்லையாகும்

ஆசிரியருரை

புலவர் இரா. இளங்குமரனார்

ஒருவன் இல்வாழ்க்கை பழிகளுக்கு அஞ்சிப் (பொருள் தேடி அப் பொருளால் வந்த உணவைப்) பகுத்துண்பதேக் கடமையாகக் கொண்டால் அவ வாழ்வு வாழ்பவனின் வழிகளில் எப்பொழுதும் குறைவுண்டாதல் இல்லை

குறளிசை

குறள் 43 5.இல்வாழ்க்கை குறள் 45
முகப்பு

குறள் 45

குறள் ௩௫

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது

சீர் பிரிக்கப்பட்ட குறள்

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது .

ஒளியுரை

விரைவில்

பதவுரை

இல்வாழ்க்கை-இல்லற வாழ்க்கையானது
அன்பும் அறனும்-அன்புடைமையினையும்
உடைத்தாயின் -பெற்றிருக்குமானால்
அது-அதுவே
பண்பும் பயனும்-சிறந்த குணமும் பயனும் ஆகும்

ஆசிரியருரை

புலவர் இரா. இளங்குமரனார்

ஒருவன் இல்வாழ்கை அன்புத் தன்மையையும் அறச் செய்கையையும் கொண்டிருக்குமானால் முறையே அவை அவ்வில்வாழ்வின் பண்பாகவும் பயனாகவும் விளங்கும்

குறளிசை

குறள் 44 5.இல்வாழ்க்கை குறள் 46
முகப்பு

குறள் 46

குறள் ௩௬

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போஒய்ப் தெவன் ?

சீர் பிரிக்கப்பட்ட குறள்

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்துஆற்றின்
போஒய்ப் பெறுவது எவன்?

ஒளியுரை

விரைவில்

பதவுரை

இல்வாழ்க்கை-இல்லற வாழ்க்கையினை
அறத்தாற்றின்-அறமான வழியில்
ஆற்றின்-நடத்துவானே
புறத்தாற்றின் -புறமான வேறு வழியில்
போஒய்ப்பெறுவது-போய் அடைகின்ற பயன்
எவன்-யாது இருக்கின்றது

ஆசிரியருரை

புலவர் இரா. இளங்குமரனார்

ஒருவன் தன் இல்வாழ்வை அறவழியில் நடத்துவானேயானால் அந்த இல்வாழ்வு அல்லாத பிறவழிகளில் போய் அவன் அடையத் தக்கது உண்டோ?

குறளிசை

குறள் 45 5.இல்வாழ்க்கை குறள் 47
முகப்பு

குறள் 47

குறள் ௩௭

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை

சீர் பிரிக்கப்பட்ட குறள்

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை

ஒளியுரை

விரைவில்

பதவுரை

இல்வாழ்க்கை-இல்லற வாழ்க்கையில் இருந்து கொண்டு
இயல்பினான்-இயல்பாகவே பொருத்தமான தன்மைகளுடன்
வாழ்பவன்-இதுதான்
என்பான்-என்று
முயல்வாருள் -எடுத்துக் கூறல் வேண்டுவதில்லையாகும்
எல்லாம் -சுமந்து துக்கிச் செல்பனோடு
தலை-அமர்திருப்பவன்

ஆசிரியருரை

புலவர் இரா. இளங்குமரனார்

இயல்பான அறமுறையில் இல்வாழ்க்கை வாழ்பவன் என்று சொல்லப்படுபவன் (பிறவழிகளில்) தம்மை மேம்படுத்த முயலும் முயற்சியாளர் அனைவரையும் விட முதன்மையானவன் ஆவன்.

குறளிசை

குறள் 46 5.இல்வாழ்க்கை குறள் 48
முகப்பு

குறள் 48

குறள் ௩௮

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து

சீர் பிரிக்கப்பட்ட குறள்

ஆற்றின் ஒழுக்கி அறன்இழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.

ஒளியுரை

விரைவில்

பதவுரை

ஆற்றின்-துறவறத்தில் நின்றவர்களையும் நல்வழியில்
ஒழுக்கி-ஒழுகச் செய்து
அறன்இழுக்கா-தானும் அறத்தினை விட்டு நீக்காமல் நடத்தும்
இல்வாழ்க்கை -இல்லற வாழ்க்கையானது
நோற்பாரின்-நோன்பு நோற்றுத் தவம் செய்பவர்களைவிட
நோன்மை உடைத்து-பொறுமையுடையதாகும்

ஆசிரியருரை

புலவர் இரா. இளங்குமரனார்

பிறரை நல்வழியில் நடக்கச் செய்து தானும் நல்வழியில் தவறாமல் நடப்பவன் இல்வாழ்க்கை கடுந்தவன் செய்பவர் தவத்தினும் வலிமையுடையதாகும்

குறளிசை

குறள் 47 5.இல்வாழ்க்கை குறள் 49
முகப்பு

குறள் 49

குறள் ௩௯

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று

சீர் பிரிக்கப்பட்ட குறள்

அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று .

ஒளியுரை

விரைவில்

பதவுரை

அறன்-அறம்
எனப்பட்டதே-என்று சொல்லப்படுவது
இல்வாழ்க்கை -இல்லறமேயாகும்
அஃதும் -ஏனைய துறவறமும்
பிறன் -பிறரால்
பழிப்பது -பழிக்கப் படுவது என்பது
இல்லாயின் -இல்லையானால்
நன்று-
நல்லதாகும்

ஆசிரியருரை

புலவர் இரா. இளங்குமரனார்

அறம் என்று நூல்வல்லோரால் சொல்லப்பட்டது இல்வழ்வே.அவ்வாழ்வு புகழுக்குரியதே எனினும் பிறர் பழித்தற்கும் இடமில்லாது அமைந்தால் மேலும் நல்ல புகழுக்குரியதாம்

குறளிசை

குறள் 48 5.இல்வாழ்க்கை குறள் 50
முகப்பு

குறள் 50

குறள் ௩௦

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

சீர் பிரிக்கப்பட்ட குறள்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

ஒளியுரை

விரைவில்

பதவுரை

வாழ்வாங்கு -வாழ வேண்டிய முறையில்
வையத்துள் -இவ்வுலகில்
வாழ்பவன்-வாழ்கின்ற இல்லறத் தான்
வான்-வானுகில்
உறையும் -வசிக்கின்ற
தெய்வத்துள் -தெய்வங்களுடனே
வைக்கப்படும் -வைக்கப்படுவான்

ஆசிரியருரை

புலவர் இரா. இளங்குமரனார்

உலகில் வாழவேண்டிய முறைப்படி வாழ்பவன் மேம்பட்ட புகழுகில் நிலைபெறும் தெய்வங்களுள் ஒரு தெய்வமாக மதிக்கப்படுவான்

குறளிசை

குறள் 49 5.இல்வாழ்க்கை