முகப்பு

அதிகார விளக்கம்

4.அறன் வலியுறுத்தும்

அறத்தின் தேவையை வற்புறுத்தும்

ஒளியுரை

விரைவில்
குறள் 31 குறள் 32 குறள் 33 குறள் 34 குறள் 35 குறள் 36 குறள் 37 குறள் 38 குறள் 39 குறள் 40
முகப்பு

குறள் 31

குறள் ௩௧

சிறப்பீனும் செல்வமும் ஈனும்;அறத்தினூஉங்
காக்கம் எவனோ உயிர்க்கு ?

சீர் பிரிக்கப்பட்ட குறள்

சிறப்புஈனும் செல்வமும் ஈனும்;அறத்தின்ஊஉங்கு
காக்கம் எவனோ உயிர்க்கு ?

ஒளியுரை

விரைவில்

பதவுரை

சிறப்புஈனும்-பெருஞ்சிறப்பினையும் தரும்
செல்வமும்-மேலான செல்வத்தினையும்
ஈனும்-தருவதாகும்
உயிர்க்கு -மக்களுயிர்க்கு
அறத்தின்-அறத்தினைவிட
ஊங்கு -மேம்பட்ட
காக்கம் -செல்வம் (ஆக்கம்)
எவன்வேறு என்ன இருகின்றது

ஆசிரியருரை

புலவர் இரா. இளங்குமரனார்

சிறந்த புகழைத் தருவதும் நிறைந்த பொருளைத் தருவதும் அறமேயாகும்.ஆதலால், அந்த அறத்தைக் காட்டிலும் உயிருக்கு நலம் செய்வது வேறொன்றும் இல்லை

குறளிசை

4.அறன் வலியுறுத்தும் குறள் 32
முகப்பு

குறள் 32

குறள் ௩௨

அறத்தினூஊங் காக்கமும் இல்லை; அதனை
மறத்தலி னூங்கில்லை கேடு.

சீர் பிரிக்கப்பட்ட குறள்

அறத்தின்ஊங்கு ஆக்கமும் இல்லை; அதனை
மறத்தலின் ஊங்குஇல்லை கேடு.

ஒளியுரை

விரைவில்

பதவுரை

அறத்தின்-ஆசைகளை யெல்லாம் விட்ட முனிவரது
ஊங்கு-பெருமையினை
ஆக்கமும்-எண்ணிக் கணக்கிட்டு இவ்வளவென்று சொல்லபோனால்
இல்லை-இந்த உலகில்
அதனை-இதுவரை இறந்தவர்களை
மறத்தலின் -எண்ணிக் கணக்கிட்டுக் கொண்டது
ஊங்கு -எண்ணிக் கணக்கிட்டுக் கொண்டது
இல்லை கேடு -போன்றதாகும்

ஆசிரியருரை

புலவர் இரா. இளங்குமரனார்

அறஞ் செய்தலினும் ஒருவனுக்கு நன்மையாவது எதுவும் இல்லை;அதுபோல் அவ்வறத்தைமறத்தலினும்கேடாவதும் எதுவும் இல்லை

குறளிசை

குறள் 31 4.அறன் வலியுறுத்தும் குறள் 33
முகப்பு

குறள் 33

குறள் ௩௩

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாம் செயல் .

சீர் பிரிக்கப்பட்ட குறள்

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாம் செயல்.

ஒளியுரை

விரைவில்

பதவுரை

ஒல்லும்-தம்மால் முடியக் கூடிய
வகையான் -வழிகளில் எல்லாம்
அறவினை-அறமான செயல்களை
ஓவாதே-எப்போதும்
செல்லும்-செல்லக்கூடிய
வாய்-இடங்களில்
எல்லாம்-எல்லாம்
செயல்-செய்தல் வேண்டும்

ஆசிரியருரை

புலவர் இரா. இளங்குமரனார்

பொருந்தும் வகையால் அறச்செயல்களை இடைவிடாமல், முடியும், இடங்களி லெல்லாம் செய்தல் ஒவ்வொருவர்க்கும் கடமையாம் .

குறளிசை

குறள் 32 4.அறன் வலியுறுத்தும் குறள் 34
முகப்பு

குறள் 34

குறள் ௩௪

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.

சீர் பிரிக்கப்பட்ட குறள்

மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற.

ஒளியுரை

விரைவில்

பதவுரை

மனத்துக்கண்-மனத்தில்
மாசு-குற்றம்
இலனாதல்-இல்லாதவனாக இருக்க வேண்டும்
அறன்-அறம் என்பது
அனைத்து-அவ்வளவேயாகும்
பிற-அதுவல்லாமல் செய்யபடுவன யாவும்
ஆகுல-ஆரவாரம் என்னும்
நீர-தன்மையுடையனவாகும்

ஆசிரியருரை

புலவர் இரா. இளங்குமரனார்

மனத்தில் குற்றம் இல்லாதவன் ஆகுதலே எல்லா அறங்களுக்கும் மூலமாகும். மற்றவை ஆக்கம் கெடுப்பவையாம்

குறளிசை

குறள் 33 4.அறன் வலியுறுத்தும் குறள் 35
முகப்பு

குறள் 35

குறள் ௩௫

அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்ற தறம்.

சீர் பிரிக்கப்பட்ட குறள்

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.

ஒளியுரை

விரைவில்

பதவுரை

அழுக்காறு-பொறமைக் குணம்
அவா-ஆசையும்
வெகுளி -சினமும்
இன்னா-கடுமையான
சொல்-சொல்லும்
நான்கும்-நான்கும்
இழுக்கா-விலக்கப்பட்டு
இயன்றதுஅறம்-நடைபெறுவதே அறமாகும்

ஆசிரியருரை

புலவர் இரா. இளங்குமரனார்

பொறாமை,ஆசை சீற்றம் கடுஞ்சொல் என்னும் தீய தன்மைகள் நான்கையும் விட்டு நீங்கி நடப்பதே அறமாகும்

குறளிசை

குறள் 34 4.அறன் வலியுறுத்தும் குறள் 36
முகப்பு

குறள் 36

குறள் ௩௬

'அன்றறிவாம்' என்னா தறம்செய்க; மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.

சீர் பிரிக்கப்பட்ட குறள்

'அன்றுஅறிவாம்' என்னாது அறம்செய்க; மற்றுஅது
பொன்றும்கால் பொன்றாத் துணை.

ஒளியுரை

விரைவில்

பதவுரை

அன்று-இறந்துபோகின்ற காலத்தில்
அறிவாம் என்னாது -அறிந்து செய்பவராவோம் என்று இருக்காமல்
பொன்றும்கால்-இறந்குங்காலத்தில்
அறம்செய்க -இப்போதே அறத்தினைச் செய்வாயாக
அது-அப்படிச் செய்வதானது
பொன்றா-அழியாத
துணை-துணையாக இருக்கும்

ஆசிரியருரை

புலவர் இரா. இளங்குமரனார்

பின்னே செய்யலாம் என்று காலம் கழியாமல் உடனே அறம் செய்தல் வேண்டும் ஏனெனில், அவ்வறமே இறக்கும் பொழுதும் இறவாத்துணையாக இருக்கும்

குறளிசை

குறள் 35 4.அறன் வலியுறுத்தும் குறள் 37
முகப்பு

குறள் 37

குறள் ௩௭

அறத்தா றிதுவென வேண்டா. சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தான் இடை.

சீர் பிரிக்கப்பட்ட குறள்

அறத்துஆறு இது எனவேண்டா. சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

ஒளியுரை

விரைவில்

பதவுரை

அறத்து-அறத்தினது
ஆறு-பயனும் வழியும்
இது-இதுதான்
என-என்று
வேண்டா -எடுத்துக் கூறல் வேண்டுவதில்லையாகும்
சிவிகை-பல்லகினை
பொறுத்தானோடு -சுமந்து துக்கிச் செல்பனோடு
ஊர்ந்தான் இடை-அமர்திருப்பவன்

ஆசிரியருரை

புலவர் இரா. இளங்குமரனார்

பல்லக்கைச் சுமந்து செல்பவனுக்கும் அதன்மேல் அமர்ந்து செல்பவனுக்கும் இடையேயுள்ள வேறுபாடு அறத்தின் பயன் என எண்ணவே வேண்டா.(அது பொருட் செல்வத்தால் ஏற்பட்டதாகும்)

குறளிசை

குறள் 36 4.அறன் வலியுறுத்தும் குறள் 38
முகப்பு

குறள் 38

குறள் ௩௮

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல் .

சீர் பிரிக்கப்பட்ட குறள்

வீழ்நாள் படாமை நன்றுஆற்றின் அஃதுஒருவன்
வாழ்நாள் வழிஅடைக்கும் கல்.

ஒளியுரை

விரைவில்

பதவுரை

வீழ்நாள்-அறம் செய்யாமல் வீணாகும் நாள்
படாமை-ஊண்டாகிவிடாமல்
நன்றுஆற்றின்-அறத்தினைச் செய்வானானால்
அஃது -அவ்வாறு செய்வதானது
ஒருவன் -ஒருவன்
வாழ்நாள்-மீண்டும் உயிரோடு கூடி வாழும் நாளின்
வழிஅடைக்கும் -வழியினை அடைக்கும்
கல்-கல்லாகும்

ஆசிரியருரை

புலவர் இரா. இளங்குமரனார்

வீணாகக் கழியும் நாள் ஆகாமல் ஒருவன் நல்ல அறச் செயல்களைச் செய்தால் அது அவன் வாழ்நாள் ஆற்றை அடைத்துக் காக்கும் அணையாகும்

குறளிசை

குறள் 37 4.அறன் வலியுறுத்தும் குறள் 39
முகப்பு

குறள் 39

குறள் ௩௯

அறத்தான் வருவதே இன்பம் ; மற்றெல்லாம்
புறந்த புகழும் இல

சீர் பிரிக்கப்பட்ட குறள்

அறத்தான் வருவதே இன்பம் ; மற்றுஎல்லாம்
புறந்த புகழும் இல.

ஒளியுரை

விரைவில்

பதவுரை

அறத்தான்-அறவழிகளினாலே
வருவதே இன்பம் -வருவதான இன்பமே மெய்யான இன்பமாகும்
மற்றெல்லாம் -வேறு முறைகளில் வருவன வெல்லாம்,
புறந்த-இன்பமல்லாமல் துன்பம் தருவனவேயாகும்
புகழும் இல-புகழினையும் உடையவை அல்ல

ஆசிரியருரை

புலவர் இரா. இளங்குமரனார்

அறவழியால் வரும் இன்பமே இன்பமாம்; மற்றை வழியால் வருவன(இன்பம் உண்டாவான போல் தோன்றினும்) துன்பமேயாம்; மேலும் புகழும் இல்லாதனவுமாம்

குறளிசை

குறள் 38 4.அறன் வலியுறுத்தும் குறள் 40
முகப்பு

குறள் 40

குறள் ௩௦

செயற்பால தோரும் அறனே;ஒருவற்
குயற்பால தோரும் பழி.

சீர் பிரிக்கப்பட்ட குறள்

செயற்பாலது ஓரும் அறனே ; ஒருவற்கு
உயற்பாலது ஓரும் பழி.

ஒளியுரை

விரைவில்

பதவுரை

ஒருவற்கு -ஒருவனுக்கு
செயற்பாலது -செய்ய வேண்டிய தன்மையுடையது
அறனே-அறச் செயல்களே
உயல்-நீக்க வேண்டிய
பாலது -தன்மையுடையது
பழி -தீய செயல்களேயாகும்

ஆசிரியருரை

புலவர் இரா. இளங்குமரனார்

ஒருவன் செய்யத் தக்கவை நல்லறச் செயல்களே அவ்வாறே அவன் செய்யாமல் விடத்தக்கவை பழிச் செயல்களே

குறளிசை

குறள் 39 4.அறன் வலியுறுத்தும்