முகப்பு

அதிகார விளக்கம்

3.நீத்தார் பெருமை

பற்றற்ற துறவோர் -முனிவர்-சித்தர் -பெருமை

ஒளியுரை

விரைவில்
குறள் 21 குறள் 22 குறள் 23 குறள் 24 குறள் 25 குறள் 26 குறள் 27 குறள் 28 குறள் 29 குறள் 30
முகப்பு

குறள் 21

குறள் ௨௧

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு

சீர் பிரிக்கப்பட்ட குறள்

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு

ஒளியுரை

விரைவில்

பதவுரை

ஒழுக்கத்து-சீரிய ஒழுக்கத்திலே நிலைத்து
நீத்தார்-துறந்தவரது
பெருமை-பெருமையினை
விழுப்பத்து-உயர்வான பொருள்கள் எல்லாவற்றுள்ளும் ()உயர்ந்ததென்று
வேண்டும்-விரும்புவதாகும்
பனுவல் -நூல்களது
துணிவு-துணிவான உறுதிபாடு என்பதாகும்

ஆசிரியருரை

புலவர் இரா. இளங்குமரனார்

ஒழுக்கத்தில் நிலைபெற்றுத் துறந்தவர் பெருமையே, பெருமைக் குரியன பலவற்றுள்ளும் சிறந்தது என்பது உயர்ந்த நூல்களின் முடிபாகும்

குறளிசை

3.நீத்தார் பெருமை குறள் 22
முகப்பு

குறள் 22

குறள்௨௨

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்
திறந்தாரை எண்ணிக்கொண் டற்று .

சீர் பிரிக்கப்பட்ட குறள்

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண்டு அற்று.

ஒளியுரை

விரைவில்

பதவுரை

துறந்தார்-ஆசைகளை யெல்லாம் விட்ட முனிவரது
பெருமை -பெருமையினை
துணைக்கூறின் -எண்ணிக் கணக்கிட்டு இவ்வளவென்று சொல்லபோனால்
வையத்து-இந்த உலகில்
இறந்தாரை -இதுவரை இறந்தவர்களை
எண்ணிக்கொண்டு -எண்ணிக் கணக்கிட்டுக் கொண்டது
அற்று -போன்றதாகும்

ஆசிரியருரை

புலவர் இரா. இளங்குமரனார்

துறவோர் பெருமைக்கு அளவில்லை. அதனை அளவிட்டுக் கூறுவதாயின்'இவ்வுலகில் இப்பொழுது வரை இறந்து போனவர் எத்தனை பேர்'என எண்ணத் தொடங்கி,முடியாமல் கைவிடுவது போன்றது.

குறளிசை

குறள் 21 3.நீத்தார் பெருமை குறள் 23
முகப்பு

குறள் 23

குறள் ௨௩

இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு.

சீர் பிரிக்கப்பட்ட குறள்

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.

ஒளியுரை

விரைவில்

பதவுரை

இருமை-பிறப்பு,வீடு என்னும் இரண்டு
வகை -இன்ப துன்ப வகைகளை
தெரிந்து -அறிந்து தெரிந்து
ஈண்டு -இப்பிறப்பில்
அறம் பூண்டார்-துறவறத்தினைமேற்கொண்டவரது
பெருமை -பெருமையே
உலகு-உலகத்தில்
பிறங்கிற்று -சிறந்ததாகும்

ஆசிரியருரை

புலவர் இரா. இளங்குமரனார்

இருவேறு இயல்புடைய இவ் வுலகியல் தெரிந்து பற்றறுதல் என்னும் அறத்தைக் கொண்டவர் பெருமை உலகில் விளங்கும் எப்பெருமையினும் பெருமையுடையதாகும் .(இருவேறு இயல்பு ஆக்கமும் கெடும் )

குறளிசை

குறள் 22 3.நீத்தார் பெருமை குறள் 24
முகப்பு

குறள் 24

குறள்௨௪

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து .

சீர் பிரிக்கப்பட்ட குறள்

உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான்
வரன்என்னும் வைப்பிற்குஓர் வித்து .

ஒளியுரை

விரைவில்

பதவுரை

உரன் -திண்மையான அறிவு
தோட்டியான் -அங்குசத்தினால்
ஓர் ஐந்தும் -பொறிகளாகிய
என்னும் -என்கின்ற
காப்பான் -அடக்கிக் காப்பவன்
வரன்என்னும் -எல்லாவற்றினும் மேலானதென்று கூறப்படும்
வைப்புக்கு -பேரின்ப நிலத்திற்கு
ஓர்வித்து-ஒரு விதையவன்

ஆசிரியருரை

புலவர் இரா. இளங்குமரனார்

அறிவு என்னும் துறட்டியால் (தோட்டியால்) பொறிகளாகிய யானைகள் ஐந்தையும்அடக்கிக் காப்பவன்,ஆக்கம் என்னும் களஞ்சியத்தை நிரப்பும் ஒப்பற்ற நல்ல மணிகளைத் தரும் பொருக்குமணிஆவான்

குறளிசை

குறள் 23 3.நீத்தார் பெருமை குறள் 25
முகப்பு

குறள் 25

குறள் ௨௫

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலும் கரி.

சீர் பிரிக்கப்பட்ட குறள்

ஐந்து அவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ஊளார்கோமான்
இந்திரனே சாலும் கரி .

ஒளியுரை

விரைவில்

பதவுரை

ஐந்து-மெய்,வாய்,கண்,மூக்கு,செவி,ஆகிய ஐந்தின் வழியில் ஐந்து ஆசைகளையும்
அவித்தான்-அடக்கியவனது
ஆற்றல் -வலிமைக்கு
அகல் -அகன்ற
விசும்பு ளார்-வானத்திலுள்ளவர்களுடைய
கோமான் -தலைவனான
இந்திரனே-இந்திரனே
சாலும்-அமைத்து உணர்த்தும்
கரி-சாட்சி (சான்று) ஆகும்

ஆசிரியருரை

புலவர் இரா. இளங்குமரனார்

ஐம்புலன்களையும் அடக்கிய நீத்தார் திறத்திற்கு எண்ணற்ற புகழுடம்பாளர்க்கு ஒரு பெருந் தலைவனாகக் கூறப்படும் ஐந்திரனே (இந்திரனே) சிறந்த சான்றவான் ( ஐந்தவித்தான் ஐந்திரன்)

குறளிசை

குறள் 24 3.நீத்தார் பெருமை குறள் 26
முகப்பு

குறள் 26

குறள்௨௬

செயற்கரிய செய்வார் பெரியர்; சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.

சீர் பிரிக்கப்பட்ட குறள்

செயற்குஅரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார் .

ஒளியுரை

விரைவில்

பதவுரை

செயற்கு அரிய -செய்வதற்கு அருமையானவற்றை
செய்வார்-செய்பவர்கள்
பெரியர் -பெரியோர்கள் ஆவார்கள்
செயற்கு -செய்வதற்கு
அரிய -செய்ய முடியதவார்கள்
சிறியர் -சிரியோர்களாவார்கள்

ஆசிரியருரை

புலவர் இரா. இளங்குமரனார்

பிறரால் செய்தற்கு அரிய நல்ல செயல்களைச் செய்பவரே பெரியவர்; அவ்வாறு செய்தற்கு அரிய செயல்களைச் செய்யாதவர் சிறியவர்

குறளிசை

குறள் 25 3.நீத்தார் பெருமை குறள் 27
முகப்பு

குறள் 27

குறள் ௧௭

சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு .

சீர் பிரிக்கப்பட்ட குறள்

சுவைஒளி ஊறுஒசை நாற்றம்என்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு .

ஒளியுரை

விரைவில்

பதவுரை

சுவை -நீண்ட பெரிய
ஒளி -கடலும்
ஊறு-தன்னுடைய
ஒசை -தன்மையில்
நாற்றம் -குறைந்து விடும்
என்று-மேகம்தான்
ஐந்தின்வகை -அக்கடல் நீரைக் குறைத்து
தெரிவான்கட்டே-அக்கடல் நீரைக் குறைத்து
உலகு -அதனிடத்தில் மழை பெய்யாமல் இருந்து விட்டால்

ஆசிரியருரை

புலவர் இரா. இளங்குமரனார்

சுவை ஒளி ஊறு (தொடுதலுணர்வு) ஓசை மணம் என்னும் ஐந்தின் விரிவுகளைத் தெரிந்த நீத்தாரிடத்தேதான் உலகியக்கம் அடங்கியுள்ளது

குறளிசை

குறள் 26 3.நீத்தார் பெருமை குறள் 28
முகப்பு

குறள் 28

குறள் ௨௮

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும் .

சீர் பிரிக்கப்பட்ட குறள்

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும் .

ஒளியுரை

விரைவில்

பதவுரை

நிறை-பொருளும் பயனும் நிறைந்த
மொழி-மொழிகளையுடைய
மாந்தர் பெருமை-முனிவர்களுடைய பெருமையினை
நிலத்து -உலகில்
மறைமொழி -அவர்கள் ஆணையாகச் சொல்லும் சொற்களே
காட்டி விடும்-கண் கூடாகக் காட்டும்

ஆசிரியருரை

புலவர் இரா. இளங்குமரனார்

சொல்லியது சொல்லியவாறே நிறைவேறும் சொற்களைச் சொல்லும் நீத்தார் பெருமையை,இவ்வுலகைக் கட்டிக் காக்கும் அவர்தம் பாதுகாப்பு மொழிகளே காண்பித்து விடும்

குறளிசை

குறள் 27 3.நீத்தார் பெருமை குறள் 29
முகப்பு

குறள் 29

குறள் ௨௯

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது

சீர் பிரிக்கப்பட்ட குறள்

குணம்என்னும் குன்றுஏறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.

ஒளியுரை

விரைவில்

பதவுரை

குணம்-மெய்யுணர்வான சீரிய குணம்
என்னும் -என்று சொல்லப்பட்ட
குன்று -குன்றின் மேல்
ஏறி-ஏறி
நின்றார் -நின்ற முனிவர்களுடைய
வெகுளி -சினம்
கணமேயும் -தன் உள்ள அளவு கண நேரமேயானாலும்
காத்தல் -வேகுளப்பட்டவரால் அதனைத் தடுத்தல்
அரிது-முடியாததாகும்

ஆசிரியருரை

புலவர் இரா. இளங்குமரனார்

உயர்குணம் என்னும் மலையின்மேல் ஏறிநின்ற நீத்தார் கொண்ட சீற்றம் ஒரு நொடிப் பொழுது அளவு கூடத் தங்காது

குறளிசை

குறள் 28 3.நீத்தார் பெருமை குறள் 30
முகப்பு

குறள் 30

குறள் ௩௦

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான் .

சீர் பிரிக்கப்பட்ட குறள்

அந்தணர்என்போர் அறவோர் மற்று எவ்உயிர்க்கும்
செந்தண்மை பூண்டுஒழு கலான் .

ஒளியுரை

விரைவில்

பதவுரை

எவ்உயிர்க்கும் -எல்லா உயிர்களிடத்தும்
செந்தண்மை -அருளுடைமையினை
பூண்டு-கடுமையாக மேற்கொண்டு
ஒழுகலான்-நடந்து கொள்ளுவதனாலே
அந்தணர் -அந்தணர்
என்போர்-என்று கூறபடுவோர்
அறவோர் -ஆசைகளை அறுத்து அறநெறியிலே நின்ற முனிவர்களேயாவார்கள்

ஆசிரியருரை

புலவர் இரா. இளங்குமரனார்

எல்லா உயிர்களிடத்தும் அருள் (அருள்நெறி பேணாதவர் அந்தணர் ஆகார்)

குறளிசை

குறள் 29 3.நீத்தார் பெருமை