முகப்பு

அதிகார விளக்கம்

2. வான் சிறப்பு

மழையின் சிறப்பு

குறள் 11 குறள் 12 குறள் 13 குறள் 14 குறள் 15 குறள் 16 குறள் 17 குறள் 18 குறள் 19 குறள் 20
முகப்பு

குறள் 11

குறள் ௧௧

வானின் றுலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று

சீர் பிரிக்கப்பட்ட குறள்

வானின் றுலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று

ஒளியுரை

விரைவில்

பதவுரை

வான்நின்று-மலையானது நீங்காமல் பெய்து வருவதால்
உலகம்-உலகிலுள்ள உயிர்கள்
வழங்கி வருதாலன்-நிலைபெற்று இருந்து வருகின்றன
(ஆதலால்) தான் அமிழ்தம்-அம்மழைதான் அமிழ்தமாகும்
என்று-என்பதாக
உணரல்-தெரிந்துகொள்ள வேண்டிய
பாற்று-தன்மை உடையதாகும்

ஆசிரியருரை

புலவர் இரா. இளங்குமரனார்

மழைபொழிந்து உலகுக்கு வேண்டும் நலங்களை வழங்கி வருவதால், அம்மழையே உலகுக்கு அமிழ்தம் என்று உணர்வதற்கு உரியது

குறளிசை

2. வான் சிறப்பு குறள் 12
முகப்பு

குறள் 12

குறள் ௧௨

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை

சீர் பிரிக்கப்பட்ட குறள்

துப்பார்க்குத் துப்புஆய துப்புஆக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை

ஒளியுரை

விரைவில்

பதவுரை

துப்பார்க்கு-உணவு உண்பவர்களுக்கு
துப்புஆய -நல்லதான
துப்பு -உணவுகளை
ஆக்கி -உண்டாக்கி
துப்பார்க்கு -(உணவுகளை) உண்பவர்களுக்கு
துப்பு -தானும் உணவு
ஆயதூஉம்-ஆவதும்
மழை -மழையேயாகும்

ஆசிரியருரை

புலவர் இரா. இளங்குமரனார்

உண்பவர்க்கு வேண்டிய உணவுப் பொருள்களை உண்டாக்கித் தருவதுடன் உண்பவார்க்குக் 'குடிநீர்' என்னும் உணவாக இருப்பதும் மழையேயாம்

குறளிசை

குறள் 11 2. வான் சிறப்பு குறள் 13
முகப்பு

குறள் 13

குறள் ௧௩

விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்
துண்ணின் றுடற்றும் பசி .

சீர் பிரிக்கப்பட்ட குறள்

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியன் உலகத்து
உள்நின்று உடற்றும் பசி.

ஒளியுரை

விரைவில்

பதவுரை

விண்-மழை
இன்று -பெய்யாதபடி
பொய்ப்பின் -பொய்த்து விடுமானால்
விரிநீர் -கடலால் சூழப்பட்ட
வியன் -அகன்ற உலகத்தினுள்
பசிநின்று -பசி நிலையாக நின்று
உடற்றும் -எல்லாம் உயிர்களையும் துன்புறுத்தும்

ஆசிரியருரை

புலவர் இரா. இளங்குமரனார்

வேண்டிய காலத்தில் மழைபெய்யத் தவறி விடுமானால் பரந்த கடல் சூழ்ந்த உலகத்துள்ள உயிர்களை யெல்லாம் பசி நீங்காமல் துன்புறுத்தும்

குறளிசை

குறள் 12 2. வான் சிறப்பு குறள் 14
முகப்பு

குறள் 14

குறள் ௧௪

ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால் .

சீர் பிரிக்கப்பட்ட குறள்

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளம்குன்றிக் கால்.

ஒளியுரை

விரைவில்

பதவுரை

உழவர் -உழவர்கள்
ஏரின் -ஏரினால் ,உழவுத் தொழிலினைச்
(எப்போதென்றால்) புயல் -மழை
என்னும் -எனப்படும்
வாரி -வருவாய்
வளம் -தனது வளமாகிய பயன்
குன்றிக்கால் -குறைந்து விட்டால்

ஆசிரியருரை

புலவர் இரா. இளங்குமரனார்

மழையென்னும் சிறந்த வருமானம் குறைந்து போகும் காலம் உண்டாகுமானால்,உழவர் தம் ஏரைப் பூட்டி உழவுத் தொழில் செய்யவும் மாட்டார்

குறளிசை

குறள் 13 2. வான் சிறப்பு குறள் 15
முகப்பு

குறள் 15

குறள் ௧௫

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பாதுஉம் எல்லாம் மழை .

சீர் பிரிக்கப்பட்ட குறள்

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்பதூம் எல்லாம் மழை .

ஒளியுரை

விரைவில்

பதவுரை

கெடுப்பதூஉம்-பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்
கெட்டார்க்கு-(அதனால் ) கெட்ட மக்களுக்கு
சார்வாய்-துணையாக நின்று பெய்து
எடுப்பாதுஉம் -காப்பாற்றி உயர்த்துவதும்
எல்லாம்-ஆகிய எல்லாம் (செய்ய வல்லது)
மழை -மழையேயாகும்

ஆசிரியருரை

புலவர் இரா. இளங்குமரனார்

பெய்யாமல் கேடு செய்யவும் மழையால் முடியும் அவ்வாறு தன்னால் கேட்டுப் போனவர்க்குத் துணையாக நின்று பெய்து, நன்மை செய்யவும் மழையால் முடியும்

குறளிசை

குறள் 14 2. வான் சிறப்பு குறள் 16
முகப்பு

குறள் 16

குறள் ௧௬

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது .

சீர் பிரிக்கப்பட்ட குறள்

விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றுஆங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது .

ஒளியுரை

விரைவில்

பதவுரை

விசும்பின் -மேகத்திலிருந்து
துளி-மழைத் துளிகள்
வீழின் அல்லால் -வீழாமற் போனால்
மற்று ஆங்கே -அப்பொழுதே
பசும் -பசுமையான
புல்-புல்லினது
தலை - தலையையும்
காண்புஅரிது -பார்த்தல் முடியாததாகிவிடும்

ஆசிரியருரை

புலவர் இரா. இளங்குமரனார்

வானில் இருந்து மழைத்துளி விழுந்தால் அல்லாமல் அத்துளி வீழாத இடத்தில் பசும்புல் முளைத்தலையும் பார்க்க முடியாது

குறளிசை

குறள் 15 2. வான் சிறப்பு குறள் 17
முகப்பு

குறள் 17

குறள் ௧௭

நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும் , தடிந்தெழிலி
தானல்கா தாகி விடின் .

சீர் பிரிக்கப்பட்ட குறள்

நெடும்கடலும் தன்நீர்மை குன்றும் , தடிந்து எழிலி
தான்நல்காது ஆகி விடின் .

ஒளியுரை

விரைவில்

பதவுரை

நெடும் -நீண்ட பெரிய
கடலும் -கடலும்
தன்-தன்னுடைய
நீர்மை -தன்மையில்
குன்றும் -குறைந்து விடும்
எழிலிதான்-மேகம்தான்
தடிந்து -அக்கடல் நீரைக் குறைத்து
நல்காது ஆகி விடின் -அதனிடத்தில் மழை பெய்யாமல் இருந்து விட்டால்

ஆசிரியருரை

புலவர் இரா. இளங்குமரனார்

கடலில் முகந்த நீரை முகில் மழையாக மீண்டும் வழங்காது என்றால் பெரிய அக்கடலில் கிடைக்கும் வளங்கள் எல்லாமும் குறைந்து போகும்

குறளிசை

குறள் 16 2. வான் சிறப்பு குறள் 18
முகப்பு

குறள் 18

குறள் ௧௮

சிறப்பொடு பூசனை செல்லாது.வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு .

சீர் பிரிக்கப்பட்ட குறள்

சிறப்பொடு பூசனை செல்லாது.வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு .

ஒளியுரை

விரைவில்

பதவுரை

வானோர்க்கும்-வானவர்களுக்கும்
ஈண்டு-இவ்வுலகத்தில்
சிறப்பொடு-சிறப்பான திருவிழக்களுடனே கூடிய
பூசனை -பூசை
செல்லாது -நடக்காது
(எப்போதென்றால் ) வானம்-மழையானது
வறக்கு மேல்-பெய்யா விட்டால்

ஆசிரியருரை

புலவர் இரா. இளங்குமரனார்

மழை பெய்யாமல் போகுமானால் புகழ் நிலையார்களுக்கு இணங்கு நடத்தப்பட்டு சிறப்பு விழாக்களோடு நாள் வழிபாடுகளும் நடைபெற மாட்டா .

குறளிசை

குறள் 17 2. வான் சிறப்பு குறள் 19
முகப்பு

குறள் 19

குறள் ௧௭

தானம் தவமிரண்டும் தங்கா. வியனுலகம்
வானம் வழங்கா தெனின் .

சீர் பிரிக்கப்பட்ட குறள்

தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகத்து
வானம் வழங்காது எனின் .

ஒளியுரை

விரைவில்

பதவுரை

வியன்-அகன்ற
உலகம் -இவ்வுலகத்தில்
தானம் -தானம் செய்வதும்
தவம் -தவம் செய்வது
இரண்டும் -ஆகிய இரண்டும்
தங்கா -நடைபெறாது (எப்போதென்றால்)
வானம் -மழையானது
வழங்காது -பெய்யாது
என்னின் -என்றால்

ஆசிரியருரை

புலவர் இரா. இளங்குமரனார்

இப்பெரிய உலகத்தில் மழைபெய்யாது என்றால் கொடை ,தவம் (தன் துயர் தாங்கி பிறிது உயிர்க்குத் துன்பம் செய்யாமை ) என்னும் இரண்டும் அவற்றைச் செய்வார் இல்லாமல் நீங்கும்

குறளிசை

குறள் 18 2. வான் சிறப்பு குறள் 20
முகப்பு

குறள் 20

குறள் ௨௦

நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு .

சீர் பிரிக்கப்பட்ட குறள்

நீர் இன்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்
வான் இன்று அமையாது ஒழுக்கு .

ஒளியுரை

விரைவில்

பதவுரை

யார் யார்க்கும்-எவ்வகைப்பட்ட
நீர் இன்று -நீரில்லாமல்
உலகு-உலக வாழ்க்கையானது
அமையாது எனின் -நடைபெறாது ஆயின் (அதுபோல )
ஒழுக்கு -மழை நீர் இடைவிடாமல் ஒழுகும் ஒழுக்கும்
வான் இன்று-மழையானது இல்லாவிட்டால்
அமையாது -நடைபெறாது

ஆசிரியருரை

புலவர் இரா. இளங்குமரனார்

நீரில்லாமல் உலகவாழ்வு நடைபெறாது என்றால்,அம்மழை இல்லாமல் எத்தகைய உயர்ந்தவரிடத்தும் ஒழுங்கு இல்லாமல் போய்விடும் .

குறளிசை

குறள் 19 2. வான் சிறப்பு குறள் 20